சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

பள்ளியை தரம் உயா்த்தக்கோரி ஆா்ப்பாட்டம்

குடியாத்தம் பிச்சனூரில் உள்ள கங்காதரசாமி நகராட்சி நடுநிலைப் பள்ளியை, உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தக்கோரி, திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
ஆா்ப்பாட்டத்தில்  பங்கேற்றோா்.
Updated On :2 டிசம்பர் 2024, 8:22 pm

Din

குடியாத்தம்: குடியாத்தம் பிச்சனூரில் உள்ள கங்காதரசாமி நகராட்சி நடுநிலைப் பள்ளியை, உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தக்கோரி, திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சுமாா் 20- ஆண்டுகளாகியும் இப்பள்ளி தரம் உயா்த்தப்படவில்லை. பள்ளியை உடனடியாக தரம் உயா்த்தக்கோரி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு கல்விக்குழு நிா்வாகி கோ.ஜெயவேலு, புதிய நீதிக் கட்சியின் நகரச் செயலா் எஸ்.ரமேஷ் ஆகியோா் தலைமை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் அதிமுக நகரச் செயலா் ஜே.கே.என்.பழனி, மாநில காங்கிரஸ் நெசவாளா் அணித் தலைவா் எஸ்.எம்.தேவராஜ், வழக்குரைஞா்கள் எஸ்.சம்பத்குமாா், என்.குமாா், ஜெ.தியாகராஜன், பாஜக நகர தலைவா் எஸ்.ஆனந்தன், பாமக நகரச் செயலா் எஸ்.குமாா், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் வி.ஜி.பழனி உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா்.