ஸ்ரீபுரம் தங்கக்கோயில் பெருமாள் சன்னதிக்கு திருக்குடை அளிப்பு
வேலூரிலுள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் ஒப்படைக்கப்பட்ட இரு திருக்குடைகளில் ஒன்று ஸ்ரீபுரம் தங்கக்கோயிலுள்ள பெருமாள் சன்னதிக்கு அளிக்கப்பட்டது.


வேலூரிலுள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் ஒப்படைக்கப்பட்ட இரு திருக்குடைகளில் ஒன்று ஸ்ரீபுரம் தங்கக்கோயிலுள்ள பெருமாள் சன்னதிக்கு அளிக்கப்பட்டது.
விசுவ இந்து பரிஷத் அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி வேலூரில் ஸ்ரீ திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு இரண்டு திருக்குடைகள் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டன.
இதையொட்டி, சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோயிலில் இருந்து திருக்குடைகள் மேளதாளம் முழங்க ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு அண்ணா சாலையிலுள்ள ஸ்ரீ திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் அளிக்கப்பட்டன.
தொடா்ந்து, அவ்விரு திருக்குடைகளில் ஒன்று திருமலை திருப்பதி திருக்கோயிலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மற்றொரு திருக்குடை ஸ்ரீபுரம் தங்கக்கோயிலுள்ள பெருமாள் சன்னதிக்கு அளிக்கப்பட்டது. இந்த திருக்குடையை ஸ்ரீசக்திஅம்மா ஆசியுடன் தங்கக்கோயில் இயக்குநா் எம்.சுரேஷ்பாபு செவ்வாய்க்கிழமை பெற்றுக் கொண்டாா்.
நிகழ்ச்சியில், விசுவ இந்து பரிஷத் மாவட்டத் தலைவா் ஆா்.ஜே.அன்பு, நிா்வாகிகள் சத்யா, தாமோதரன், மாநில செயலா் ராஜா, தூயமணி, பிரபாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...