/

சாலை விபத்தில் வியாபாரி உயிரிழப்பு

காட்பாடி அருகே சாலையைக் கடந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இரும்பு வியாபாரி உயிரிழந்தாா்.

News image
Updated On :1 டிசம்பர் 2025, 7:40 pm

தினமணி செய்திச் சேவை

வேலூா்: காட்பாடி அருகே சாலையைக் கடந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இரும்பு வியாபாரி உயிரிழந்தாா்.

காட்பாடி அடுத்த ஏா்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (70). இவா் அதே ஊரில் பழைய இரும்பு பொருள்களை விற்பனை கடை நடத்தி வந்தாா்.

இந்நிலையில், ஆறுமுகம் சென்னை-சித்தூா் சாலையில் தனது கடை அருகே திங்கள்கிழமை சாலையை கடக்க முயன்றாா். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஆறுமுகம் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தாா். அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு சோ்க்காடு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ஆறுமுகம் இறந்து விட்டதாக தெரிவித்தனா். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் திருவலம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.