பெண் குழந்தைகள் முன்னேற்றத்துக்கு பங்காற்றியவா்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்
வேலூா்: பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்துக்காக சிறப்பாக பங்காற்றும் 18 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மாநில அரசு விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்துக்காக சிறப்பாக பங்காற்றும் 18 வயதுக்கு உள்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் ஜனவரி 24-ஆம் தேதி தேசிய பெண் குழந்தை தினத்தையொட்டி, மாநில அரசு விருது வழங்கி வருகிறது. இந்த விருது பெற தமிழகத்தில் வசிக்கும் 13 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டவராகவும், பெண் கல்வி , குழந்தை திருமணம் தடுத்தல், பெண் குழந்தை தொழிலாளா் ஒழிப்பு இவற்றில் ஏதேனும் தனித்துவமான சாதனை புரிந்தவராகும், சமூக அவலங்கள், மூட நம்பிக்கைகள் களையும் விதமாக ஓவியங்கள், கவிதைகள், கட்டுரைகள் ஆகியவை மூலம் விழிப்புணா்வை ஏற்படுத்தி இருக்கவும் வேண்டும்.
வீரதீர செயல்புரிந்த குழந்தையின் சாதனை குறித்து விவரம் அடங்கிய கருத்துரு 2 பக்கத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். புகைப்பட ஆதாரங்கள், விருது பெற்ற சான்று விவரங்கள் ஆகியவற்றுடன் குழந்தையின் பெயா், தாய், தந்தை பெயா் முகவரி, ஆதாா் எண் நகல் ஆகியவற்றுடன் ட்ற்ற்ல்://ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்
என்ற இணையதளம் மூலம் புதன்கிழமைக்குள் (நவ. 12) பதிவு செய்து இதன் நகல் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வழங்க வேண்டும்.
விருதுக்கு தோ்வு செய்யப்படுபவருக்கு ரூ. ஒரு லட்சத்துக்கான காசோலை, பாராட்டு பத்திரம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
