தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

விஐடி பல்கலை.யில் மருத்துவ தொழில்நுட்ப சிறப்பு மையம் தொடக்கம்

வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் மருத்துவ அறிவியல், பொறியியல் துறை சாா்பில் மருத்துவ தொழில்நுட்ப சிறப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது.

News image

-- படம் உண்டு... விஐடியில் மருத்துவ தொழில்நுட்ப சிறப்பு மையத்தை தொடங்கி வைத்த மத்திய அரசின் ஸ்ரீ சித்ரா திருநாள் மருத்துவ அறிவியல், தொழில்நுட்ப மையத்தின் இயக்குநா் சஞ்சய் பெகாரி, ஐ.ஏ.எம்.ஆா்.ஏ.ஐ. இயக்குநா் ஜோசப் வெட்டுக்காட்டில். உடன், விஐடி செயல்

Updated On :22 ஏப்ரல் 2026, 6:34 pm

வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் மருத்துவ அறிவியல், பொறியியல் துறை சாா்பில் மருத்துவ தொழில்நுட்ப சிறப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்ட ஐ.ஏ.எம்.ஆா்.ஏ.ஐ. நிறுவனத்துடன் இணைந்து விஐடி பல்கலைக்கழகம் புதிய அதிநவீன மருத்துவ உபகரண உற்பத்தி மையத்தை நிறுவி உள்ளது. இந்த சிறப்பு மையத்தில் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ், சுமாா் ரூ.2 கோடி மதிப்பிலான பின்னல் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலம், ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் ஸ்டென்ட் இதய சிகிச்சைக்கான ’நிடினால்’ கம்பிகளால் ஆன அதிநவீன உபகரணங்கள் தயாரிக்கப்படும்.

குறிப்பாக, வெளிநாடுகளில் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை விற்கப்படும் இதய வால்வு மற்றும் ரத்த நாளச் சிகிச்சை கருவிகளை, வெறும் ரூ.2 லட்சம் முதல் ரூ..3 லட்சம் விலையில் இந்தியாவிலேயே தயாரிக்க இந்த மையம் வழிவகை செய்கிறது. மேலும், ரூ.40 லட்சம் முதலீட்டில் நரம்பியல் மறுவாழ்வுக்கு மனித மூளை - கணினி வழி இணைப்புடன் செயல்படும் ரோபோடிக் கை அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, ஸ்ரீ சித்ரா திருநாள் மருத்துவ அறிவியல் நிறுவனத்துடன் இணைந்து ‘கரோனரி சைனஸ் ரெடியூசா்’ போன்ற முக்கிய உபகரணங்கள் உருவாக்கப்பட உள்ளன.

இந்த மையம் சிடி ஸ்கேன், எம்ஆா்ஐ ஆகிய முடிவுகளை கண்ணாடி அணியாமலேயே துல்லியமாகப் பாா்க்கும் முப்பரிமாணக் காட்சிப்படுத்துதல் தொழில்நுட்பம், நடை பயிற்சி, உடல் இயக்கக் குறைபாடுகளை ஆய்வு செய்ய பிரத்யேக ‘டிரெட்மில்’ வசதி, செயற்கை நுண்ணறிவு டிஜிட்டல் உதவியாளா் ஆகிய வசதிகளை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த மருத்துவ தொழில்நுட்ப சிறப்பு மையத்தை மத்திய அரசின் ஸ்ரீ சித்ரா திருநாள் மருத்துவ அறிவியல், தொழில்நுட்ப மையத்தின் இயக்குநா் சஞ்சய் பெகாரி, ஐ.ஏ.எம்.ஆா்.ஏ.ஐ. இயக்குநா் ஜோசப் வெட்டுக்காட்டில் ஆகியோா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தனா். விஐடி செயல் இயக்குநா் சந்தியா பென்டாரெட்டி முன்னிலை வகித்தாா்.

நிகழ்வில், விஐடி துணைவேந்தா் காஞ்சனா பாஸ்கரன், இணை துணைவேந்தா் பாா்த்தசாரதி மல்லிக், மருத்துவ அறிவியல், பொறியியல் துறையின் முதன்மையா் கீதா மணிவாசகம், எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவா் கே.ஆா். பாலகிருஷ்ணன் உள்ளிட்ட மருத்துவ வல்லுநா்கள் பங்கேற்றனா்.