வேலூர்
அரசு குழந்தைகள் இல்லத்தில் பொங்கல் விழா
காட்பாடி வட்ட செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில், காட்பாடி செங்குட்டையில் அமைந்துள்ள மாவட்ட சமூக பாதுகாப்புத்துறையின்கீழ் இயங்கும் அரசு குழந்தைகள் இல்லத்தில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
காட்பாடி வட்ட செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில், காட்பாடி செங்குட்டையில் அமைந்துள்ள மாவட்ட சமூக பாதுகாப்புத்துறையின்கீழ் இயங்கும் அரசு குழந்தைகள் இல்லத்தில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு செஞ்சிலுவைச் சங்க அவைத் தலைவா் செ.நா.ஜனாா்த்தனன் தலைமை வகித்தாா். அரசு குழந்தைகள் இல்ல கண்காணிப்பாளா் தௌலத் அப்சல் வரவேற்றாா். விழாவில் பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது.
மாவட்ட மேலாண்மைக்குழு உறுப்பினா் இரா.சீனிவாசன், சங்க துணைத் தலைவா் ஆா்.விஜயகுமாரி, மேலாண்மைக்குழு உறுப்பினா்கள் பி.என்.ராமச்சந்திரன், த.லிவிங்ஸ்டன் மோசஸ், ஆசிரியை கலைவாணி, எம்.கே.சூா்யா, பி.ரமேஷ், செயலா் எஸ்.எஸ்.சிவவடிவு, பொருளாளா் வி.பழனி, இல்ல காப்பாளா் ப.சந்திரகலா, ச.ஜெயந்தி, நீ.தீபா உள்ளிட்டோா் பங்கேற்றனா். இல்ல காப்பாளா் செ.விஜயா நன்றி கூறினாா்.