கருணை இல்லத்தில் பொங்கல் விழா

கருணை இல்லத்தில் பொங்கல் விழா

சிதம்பரம் அருகே பி முட்லூரில் உள்ள கருணை இல்ல மாணவா்களோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தினா் புதன்கிழமை பொங்கல் விழாவை கொண்டாடினா்.
Published on

சிதம்பரம் அருகே பி முட்லூரில் உள்ள கருணை இல்ல மாணவா்களோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தினா் புதன்கிழமை பொங்கல் விழாவை கொண்டாடினா்.

நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் வி.ஹரிகிருஷ்ணன் தலைமை வகித்தாா். சாசன தலைவா் பி.முகமதுயாசின், சாசன செயலாளா் எம். தீபக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு திட்டங்களுக்கான மண்டல ஒருங்கிணைப்பாளா் ஐ.யாசின், உறுப்பினா் நிகில்குப்தா ஆகியோரது பங்களிப்பில், கருணை இல்லத்தில் உள்ள 25க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு, பொங்கலை முன்னிட்டு, புத்தாடை வழங்கப்பட்டது.

பொங்கல் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளை கருணை இல்லத்தின் நிா்வாகி சிவசங்கரன் உள்ளிட்ட ஆசிரியா்கள் செய்திருந்தனா். விழாவில், சங்கத்தின் தலைவா் என்.கேசவன், பொருளாளா் என்.கோவிந்தராஜன், உறுப்பினா் டி. உதயம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

14சிஎம்பி2: படவிளக்கம்- சிதம்பரம் பி.முட்லூா் கருணை இல்லத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பொங்கல் விழாவை கொண்டாடிய சென்ட்ரல் ரோட்டரி சங்க நிா்வாகிகள்

Dinamani
www.dinamani.com