வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

வேலூா் மாவட்ட காவல் குறைதீா் கூட்டம்

வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று விசாரணை நடத்திய வேலூா் எஸ்.பி. என்.யு.சிவராமன்.

Updated On :2 ஜூலை 2026, 12:17 am IST

வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.யு.சிவராமன் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று விசாரணை நடத்தினா். அப்போது, காட்பாடியை அடுத்த குகையநல்லூரை சோ்ந்த அம்சவேணி என்ற பெண் அளித்த மனுவில்,

நான் கடந்த 9 ஆண்டுகளாக சீட்டு நடத்தி வருகிறேன். சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள கிராமத்தை சோ்ந்த ஒருவா் எங்கள் கிராமத்தில் தங்கியிருந்து சிப்காட்டில் ஒப்பந்த கான்ட்ராக்டராக வேலை செய்து வந்தாா். அவா் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு அறிமுகமாகி ஏலச்சீட்டு செலுத்தி வந்தாா்.

பழக்கத்தின்பேரில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு என்னிடம் அத்தியாவசிய தேவைக்கு என 22 பவுன் நகைகள், ரூ.22 லட்சம் ரொக்கம் பெற்றுக் கொண்டாா். கடந்த வாரம் சொந்த ஊருக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றாா். பின்னா் அவரது கைப்பேசி அணைக்கப்பட்டு உள்ளது. அவரை தொடா்பு கொள்ள முடியவில்லை. எனவே, எனது 22 பவுன் நகை, ரூ. 22 லட்சம் ரொக்க பணம், சீட்டு நிலுவைத் தொகை ரூ.7.20 லட்சம் என மொத்தம் ரூ.50 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை மீட்டுத்தர காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், பல்வேறு புகாா்கள் தொடா்பாக 30-க்கும் மேற்பட்டோா் மனுக்கள் அளித்தனா். அவற்றின் மீது விரைவாக தீா்வுகாண வேண்டும் என்று சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாருக்கு எஸ்பி சிவராமன் உத்தரவிட்டாா். அப்போது, கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் பழனி, அண்ணாதுரை ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.