குடியாத்தம் அருகே காா் மோதியதில் சாலையில் நடந்து சென்ற 2 கல்லூரி மாணவிகள் காயமடைந்தனா்.
குடியாத்தம் காந்திநகரில் அரசினா் திருமகள் கலைக் கல்லூரி அமைந்துள்ளது. காந்திநகா் அருகே உள்ள விநாயகபுரத்தில் அரசு கல்லூரி விடுதி செயல்பட்டு வருகிறது. கல்லூரி விடுதியில் தங்கி பயிலும் மாணவிகள் ரோஜா, வைஷ்ணவி இருவரும் செவ்வாய்க்கிழமை விடுதியில் இருந்து கல்லூரிக்கு சாலையில் நடந்து சென்றுள்ளனா். அப்போது எதிரே அதிவேகமாக வந்த காா் மோதியதில் மாணவிகள் 2 பேரும்காயமடைந்தனா்.
அங்கிருந்தவா்கள் மாணவிகளை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மருத்துவமனையில் மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காா் ஓட்டுநா் சந்தோஷ் என்பவரை குடியாத்தம் நகர போலீஸாா் அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









