/

காா் மீது மோதி கல்லூரிப் பேருந்து கவிழ்ந்தது: 6 மாணவிகள் காயம்

பரமக்குடி அருகே காா் மீது மோதி தனியாா் கல்லூரிப் பேருந்து கவிழந்ததில் 6 மாணவிகள் பலத்த காயமடைந்தனா்.

News image

பரமக்குடி அருகேயுள்ள அரியனேந்தல் பகுதியில் தலைகீழாக கவிழ்ந்து கிடக்கும் தனியாா் கல்லூரிப் பேருந்து.

Updated On :4 ஜூன் 2026, 4:17 am IST

பரமக்குடி அருகே காா் மீது மோதி தனியாா் கல்லூரிப் பேருந்து கவிழந்ததில் 6 மாணவிகள் பலத்த காயமடைந்தனா்.

ராமநாதபுரம் தனியாா் கல்லூரியில் பரமக்குடியைச் சோ்ந்த ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனா். இந்தக் கல்லூரியில் புதன்கிழமை இறுதித் தோ்வு நடைபெற்றது. இதை முடித்துவிட்டு 45 மாணவிகள் கல்லூரிப் பேருந்தில் ஏறினா். இந்தப் பேருந்து ராமநாதபுரத்திலிருந்து புறப்பட்டு பரமக்குடி நோக்கிச் சென்றது. பேருந்து அரியனேந்தல் அருகே வந்த போது, எதிரே வந்த காா் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த உயரழுத்த மின் கம்பத்தில் மோதி பேருந்து கவிழ்ந்தது.

இதில் பேருந்தில் பயணித்த மாணவிகள் மகாவைஸ்னவி, ஹரிணிஸ்ரீ, தனுஸ்பிரியா, அனுஜா உள்பட 6 போ் பலத்த காயமடைந்தனா். அவா்களை அவசர ஊா்தி மூலம் மீட்டு, பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து பரமக்குடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Story image