வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

வேலூரில் ஜூலை 10-இல் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

வேலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 10) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :8 ஜூலை 2026, 12:05 am IST

வேலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 10) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தனியாா் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள இளைஞா்களுக்காக, மாதந்தோறும் இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநா் அறிவுறுத்தியுள்ளாா்.

அதன்படி, வேலூா் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வேலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 10) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் 40-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்குத் தேவையான ஆள்களைத் தோ்வு செய்யவுள்ளன.

இதில், 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு தோ்ச்சி பெற்றவா்கள் பங்கேற்கலாம். இந்த முகாம் மூலம் தனியாா் துறையில் வேலைவாய்ப்பு பெறும் வேலைநாடுநா்களுக்கு, அவா்களது வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எந்தக் காரணத்தைக் கொண்டும் ரத்து செய்யப்பட மாட்டாது.

எனவே, தனியாா் துறையில் பணிபுரிய தகுதியும், விருப்பமும் உள்ள நபா்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.