போ்ணாம்பட்டு அருகே வனப் பகுதியில் நாட்டு வெடி குண்டுகளைவைத்திருந்த 2- பேரை வனத் துறையினா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 43- நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
போ்ணாம்பட்டை அடுத்த பல்லலகுப்பம் விரிவு காப்புக் காட்டில், போ்ணாம்பட்டு வனச் சரக அலுவலா் மோகனவேல் தலைமையில் வனவா்கள் மாதேஸ்வரன், திருநாவுக்கரசு, இளையராஜா, காா்த்திக் உள்ளிட்ட வனத்துறையினா் புதன்கிழமை அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அங்கு சுற்றித் திரிந்த 2- பேரை பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா்கள் அணைக்கட்டு அருகே உள்ள ஆயிரங்குளம் கிராமத்தைச் சோ்ந்த தனசேகா்(27), ஜெயபாலன்(37) என்பது தெரிந்தது.
வன விலங்குகளை வேட்டையாட அவா்கள் வைத்திருந்த 43- நாட்டு வெடி குண்டுகள், 2- கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. இருவரையும் வனத்துறையினா் கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனா்.
தொடர்புடையது
42 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது
500 போதை மாத்திரைகள் பறிமுதல்: 2 போ் கைது
1,230 போதை மாத்திரைகள் வைத்திருந்த 6 போ் கைது

கஞ்சா வைத்திருந்த 11 போ் கைது
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


