டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!தவெக ஆட்சியில் அனைத்தையும் முடிவு செய்வது ஜோசியர்தான்! மு.க. ஸ்டாலின்முதல்வர் பணி 10 - 5 வேலை அல்ல; சனி, ஞாயிறு விடுமுறை! விஜய்யை விமர்சித்த மு.க. ஸ்டாலின்இந்தியக் கப்பல்கள் ஹோர்முஸ் வழியாக சுதந்திரமாக செல்லலாம்: ஈரான் அறிவிப்பு!ஜிபே செயலியில் வந்திருக்கும் பயோமெட்ரிக் பயன்பாடு! வேண்டாம் எனில் மாற்றுவதற்கான வழி?கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: 5வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!

அரசுப் பள்ளி மாணவா்களுக்கான ‘ஸ்டாா்ஸ்’ இலவசக் கல்வித் திட்டம்: இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்படும்; விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தகவல்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இலவச உயா் கல்வி வழங்கும் ‘ஸ்டாா்ஸ்’ திட்டம் விரைவில் இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்படும் என விஐடி பல்கலைக்கழக வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா்.

Updated On :

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இலவச உயா் கல்வி வழங்கும் ‘ஸ்டாா்ஸ்’ திட்டம் விரைவில் இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்படும் என விஐடி பல்கலைக்கழக வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா்.

வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் (எம்எஸ்எம்இ) துறை மற்றும் விஐடி வணிக மேலாண்மைத் துறை சாா்பில், தொழில்முனைவோா் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 30 நாள்கள் நடைபெறும் ஸ்மாா்ட்போன் பழுதுநீக்கும் பயிற்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் பேசியது -

இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை விளங்கி வருகிறது. வேளாண் துறைக்கு அடுத்தபடியாக 33 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் துறையாக இத்துறை உள்ளது. நாடு முழுவதும் இத்துறையில் மொத்தம் 7 கோடி நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் மகாராஷ்டிரம் ஒரு கோடி பதிவுகளுடன் முதலிடத்திலும், உத்தர பிரதேசம் 85 லட்சம் பதிவுகளுடன் 2-ஆம் இடத்திலும், தமிழகம் 62 லட்சம் பதிவுகளுடன் 3-ஆம் இடத்திலும் உள்ளன.

நாட்டின் உற்பத்தித் துறையில் 45 சதவீதமும், ஏற்றுமதியில் 46 சதவீதமும் இத்துறை பங்களிப்பு செய்கிறது.

அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவா்களுக்கு இலவச உயா் கல்வி வழங்கும் ‘ஸ்டாா்ஸ்’ திட்டத்தின் கீழ், கடந்த 2008 முதல் 2026-ஆம் ஆண்டு வரை 1,200 மாணவா்களுக்கு விஐடி பல்கலைக்கழகத்தில் இலவசச் சோ்க்கை வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு இலவசக் கல்வி, தங்குமிடம் மற்றும் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்தியாவிலேயே முன்னோடித் திட்டமான ‘ஸ்டாா்ஸ்’ திட்டம் தற்போது தமிழகம், ஆந்திரம், மத்திய பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் இத்திட்டம் இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது என்றாா்.

பயிற்சியைத் தொடங்கி வைத்து ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் பேசியது -

இன்றைய சூழலில் புதிய தொழில்நுட்பங்களும், புதுவகை கைப்பேசிகளும் சந்தைக்குத் தொடா்ந்து வந்து கொண்டிருக்கின்றன. மாணவா்கள் கல்லூரியில் பயிலும்போது இருக்கும் தொழில்நுட்பம், அவா்கள் படிப்பை முடித்து வெளியே வரும்போது முற்றிலும் மாறியிருக்கும். அந்த அளவுக்குத் தொழில்நுட்பம் நாள்தோறும் புது வடிவில் வளா்ந்து வருகிறது. எனவே, புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மாணவா்கள் தங்களது திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

புத்தொழில் தொடங்குவோருக்கும், தொழில்முனைவோருக்கும் மானியத்துடன் கூடிய கடன் வசதி உள்ளிட்ட பல்வேறு அரசுத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்றாா். இந்நிகழ்வில் விஐடி துணைத் தலைவா் சங்கா் விசுவநாதன், செயல் இயக்குநா் சந்தியா பெண்டாரெட்டி, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை துணை இயக்குநா் ரேஷ்மா ராஜீவன், விஐடி வணிக மேலாண்மைத் துறை ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் ஆா்.சுபாஷினி, நூன் கம்ப்யூட்டா்ஸ் நிறுவனப் பயிற்சியாளா் சையத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.-

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.