வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கோவையில் ஓவியர்களின் சங்கமம்!

கோவை, ஜன. 8: கோயமுத்தூர் விழாவின் ஒரு பகுதியாக கோவையில் "ஓவியச் சந்தை' என்ற பெயரில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஓவியக் கலைஞர்களின் படைப்புகளின் கண்காட்சி சனிக்கிழமை துவங்கியது.   அவிநாசி ச

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

கோவை, ஜன. 8: கோயமுத்தூர் விழாவின் ஒரு பகுதியாக கோவையில் "ஓவியச் சந்தை' என்ற பெயரில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஓவியக் கலைஞர்களின் படைப்புகளின் கண்காட்சி சனிக்கிழமை துவங்கியது.

  அவிநாசி சாலையில் உள்ள ஆர்.கே.ரங்கம்மாள் பள்ளி வளாகத்தில் இரு நாள்கள் நடைபெறும் இக் கண்காட்சியில், தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் மற்றும் புதுவையில் இருந்து 80-க்கு மேற்பட்ட ஓவியக் கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.

÷இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் இளைஞர் பிரிவான யங் இந்தியன்ஸ் அமைப்பும் கோவையின் 40-க்கு மேற்பட்ட அமைப்புகளும் இணைந்து, கோயமுத்தூர் விழாவை நடத்தி வருகின்றன.

÷ஜன. 2ல் துவங்கி தினமும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஞாயிற்றுக்கிழமையுடன் (ஜன. 9) கோயமுத்தூர் விழா நிறைவு பெறுகிறது. ஒவ்வொரு அமைப்பு சார்பிலும், கோவையின் பெருமைகள், பாரம்பரியத்தை விளக்கும் புகைப்படக் கண்காட்சிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

÷இதன் ஒரு பகுதியாக, லலித் கலாúக்ஷத்ரா அமைப்பு சார்பில் "ஓவியச் சந்தை' என்ற பெயரில் ஓவியக் கண்காட்சி சனிக்கிழமை துவங்கியது. ஓவியர்கள் பங்கேற்று தங்களது படைப்புகளைக் காட்சிக்கும் விற்பனைக்கும் வைத்துள்ளனர்.

÷கண்கவர் இக் கண்காட்சி, காண்போருக்கும், கலைப் பிரியர்களுக்கும் பெரும் விருந்தாக அமைந்துள்ளது. சிறப்பம்சமாக பார்வையாளர்களைத் தத்ரூபமாக வரைந்து கொடுக்கும் அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.

÷இளம் தலைமுறையினருக்கு கோவையின் பெருமைகளைத் தெரிவிக்கவும், பழங்காலக் கோவையின் சுவடுகளையும், இப்போதைய வளர்ச்சியையும் நேரடியாகக் காண்பதற்கான வாய்ப்பாக கோயமுத்தூர் விழா அமைந்துள்ளது என்று விழா தலைவர் சங்கர் வானவராயர் தெரிவித்தார்.

÷"கடந்த 3 ஆண்டுகளாக கோயமுத்தூர் விழாவில் ஓவியச் சந்தை இடம்பெறுகிறது. இந்த ஆண்டு இரு நாள்களுக்கு கண்காட்சி நடத்தப்படுகிறது. பல்வேறு மாநிலங்களில் இருந்து பிரபல ஓவியர்கள் கலந்து கொண்டுள்ளனர். ஏறத்தாழ 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஓவியங்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன' என்று லலித் கலாúக்ஷத்ரா இயக்குநர் ரவிராஜ் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.