இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி:800 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர், ஜன. 8: திருப்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற திருப்பாவை போட்டிகளில் மாவட்டத்திலுள்ள 66 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 800 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கான பாவை

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

திருப்பூர், ஜன. 8: திருப்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற திருப்பாவை போட்டிகளில் மாவட்டத்திலுள்ள 66 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 800 மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கான பாவை விழா, திருப்பூரில் சனிக்கிழமை நடைபெற்றது. திருக்கோவில் பக்தர் பேரவை சார்பில், தாராபுரம் சாலை விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக். பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவில், திருப் பாவை, திருவெம்பாவை மனப்பாடப் போட்டிகள், பேச்சு, கட்டுரை, இசைப்போட்டிகள் நடத்தப்பட்டன.

மனப்பாடப் போட்டிகள், எல்கேஜி பிளஸ் 2 வரை 7 பிரிவாகவும், இசைப் போட்டிகள் எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை 4 பிரிவாகவும், கட்டுரைப் போட்டிகள் அனைத்து வகுப்புகளுக்கும் ஒரே பிரிவாகவும், ஆசிரியர்களுக்கு மட்டும் பொருளுணர் திறன் தேர்வுப் போட்டிகளும் நடத்தப்பட்டன.

இப்போட்டிகளில், திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட 66 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 800 மாணவ மாணவிகளும், 60 ஆசிரியர்களும் பங்கேற்றனர். இவர்கள் ஏற்கனவே பள்ளி அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களாவர்.

மாவட்ட அளவிலான இப்போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கான பரிசளிப்பு விழா, ஞாயிற்றுக்கிழமை திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோயிலில் நடக்க உள்ளது.

விழாவுக்கு அருள்நெறி வாரவழிபாட்டுக் குழு தலைவர் எம்.ரத்தினம் தலைமை தாங்குகிறார். திருக்கோவில் பக்தர் பேரவை மாநில செயலர் கே.ராமசாமி, மாநில அமைப்புச் செயலர் மே.அ.சுதாகர் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். பேராசிரியர் ஆர்.வேணுகோபாலன் பரிசுகளை வழங்கி, "கோûப் நாச்சியார்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற உள்ளார்.

ஏற்பாடுகளை ஹிந்து ஆலய பாதுகாப்புக் குழு துணைத்தலைவர் சி.பழனிசாமி, திருக்கோவில் பக்தர் பேரவை பொருளாளர் சி.ஆறுமுகம் உள்ளிட்ட விழாக் குழுவினர் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.