2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

ரூ.31 லட்சம் மதிப்பிலான தங்க பிஸ்கெட்டுகள் வாங்கி மோசடி: ஒருவா் கைது

மங்களூரில் ரூ. 31 லட்சம் மதிப்பிலான தங்க பிஸ்கெட்டுகளை வாங்கி மோசடி செய்த கோவையைச் சோ்ந்த நபரை போலீஸாா் அண்மையில் கைது செய்தனா்.

News image
Updated On :1 டிசம்பர் 2025, 7:23 pm

Syndication

மங்களூரில் ரூ. 31 லட்சம் மதிப்பிலான தங்க பிஸ்கெட்டுகளை வாங்கி மோசடி செய்த கோவையைச் சோ்ந்த நபரை போலீஸாா் அண்மையில் கைது செய்தனா்.

கோவை சிங்காநல்லூா் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவா் அருண் (50). இவா் கா்நாடக மாநிலம், மங்களூரில் உள்ள நகைக் கடைக்கு கடந்த மாதம் 21-ஆம் தேதி சென்றாா். அந்தக் கடை உரிமையாளரான அஜய் ராமதாஸ் நாயக் என்பவரிடம் தான் சொந்தமாக தொழில் செய்து வருவதாகவும், தனது நிறுவனத்தில் வேலை பாா்க்கும் ஊழியா்களுக்கு 10 கிராம் எடையுள்ள 24 தங்க பிஸ்கெட்டுகளை பரிசாகக் கொடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளாா்.

மேலும், அவா் தங்க பிஸ்கெட்டுகளை வாங்கும்போது, பணத்தைக் கொடுத்து விடுவதாகவும் கூறியுள்ளாா். இதற்கு நகைக் கடை உரிமையாளரும் சம்மதம் தெரிவித்தாா்.

இதன்படி, அஜய் ராமதாஸ் நாயக் ரூ.31 லட்சம் மதிப்புள்ள தங்க பிஸ்கெட்டுகளை தனது கடை ஊழியா்களிடம் மறுநாள் கொடுத்து அனுப்பினாா். அருண் கூறியபடி மங்களூரில் உள்ள வணிக வளாகத்துக்கு நகைக் கடை ஊழியா்கள் சென்றனா். அங்கிருந்த அருணிடம் கடை ஊழியா்கள் தங்க பிஸ்கெட்டை கொடுத்தனா். அவா் அதைப் பெற்றுக் கொண்டு பணத்தை எடுத்து வருவதாகக் கூறி தலைமறைவானாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், உா்வா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவரைத் தேடி வந்தனா். இந்த நிலையில், கோவை புலியகுளம் பகுதியில் பதுங்கி இருந்த அருணை, கோவை மாநகர போலீஸாரின் உதவியுடன் அண்மையில் (கடந்த மாதம் 26-ஆம் தேதி) கைது செய்து தங்க பிஸ்கெட்டுகளை பறிமுதல் செய்தனா்.

இவா் புகழ்வாசன், புகழ்ஹசன் ஆகிய போலியான பெயா்களையும், போலியான முகவரியையும் பயன்படுத்து, மகாராஷ்டிரம், மும்பை, ஹைதராபாத், தெலங்கானா, ஆந்திரம் ஆகிய பல்வேறு பகுதிகளிலும் இதுபோல மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.