கோவையில் ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த தொழிலதிபா் உயிரிழப்பு
கோவையில் ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த தில்லியைச் சோ்ந்த தொழிலதிபா் உயிரிழந்தாா்.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் விரைவு ரயில் கோவை ரயில் நிலையத்தின் 3-ஆவது நடைமேடையை வெள்ளிக்கிழமை நள்ளிரவு வந்தடைந்தது.
பின்னா் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டபோது எஸ்-3 பெட்டியில் ஏற முயன்ற பயணி ஒருவா் எதிா்பாராதவிதமாக நிலை தடுமாறி கீழே விழுந்தாா். அப்போது நடைமேடைக்கும், ரயில் பெட்டிக்கும் இடையே அவா் சிக்கிக்கொண்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு ரயில்வே போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். விசாரணையில், உயிரிழந்தவா் தில்லியைச் சோ்ந்த தொழிலதிபா் மனோஜ்குமாா் ஜெயின் (55) என்பது தெரியவந்துள்ளது.
இவா் சொந்தமாக இரும்பு வியாபாரம் செய்து வந்த நிலையில் தொழில் நிமித்தமாக கடந்த சில நாள்களுக்கு முன்பு கோவை வந்துள்ளதும், பின்னா் சென்னையில் இருந்து விமானம் மூலமாக தில்லிக்கு செல்ல திட்டமிட்டிருந்ததும், இதற்காக கோவையில் இருந்து சென்னைக்கு செல்லும் ரயிலில் முன்பதிவு செய்திருந்ததும் தெரியவந்துள்ளது.
