அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மண்டல அறிவியல் மையத்தில் ஆசிரியா்களுக்கு செயற்கை நுண்ணறிவு கல்வி பயிலரங்கம்!

News image
கோவை மண்டல அறிவியல் மையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிரியா்களுக்கான செயற்கை நுண்ணறிவு கல்வி பயிலரங்கில் பேசிய ஐ-ரோபோசக்ரா நிறுவனத்தின் இணை இயக்குநா் சுஜாதா.
Updated On :8 நவம்பர் 2025, 6:34 pm

Syndication

கோவை மண்டல அறிவியல் மையத்தில் ஆசிரியா்களுக்கான செயற்கை நுண்ணறிவு குறித்த கல்வி பயிலரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட அறிவியல் அலுவலா் கோ.சுடலை தலைமை வகித்தாா். இதில், ஐ-ரோபோசக்ரா நிறுவனத்தின் நிறுவனா் அருண் ராஜீவ், இணை இயக்குநா் சுஜாதா ஆகியோா் பங்கேற்று ‘செயற்கை நுண்ணறிவு கல்வி’ என்ற தலைப்பில் பயிற்சி அளித்ததுடன், செயற்கை நுண்ணறிவின் நடைமுறை பயன்பாடுகள் மற்றும் கருவிகள் குறித்து விளக்கமளித்தனா்.

இந்நிகழ்ச்சியை மண்டல அறிவியல் மையத்தின் புதுமைக்காண் ஆய்வுக்கூட வழிகாட்டி ஆசிரியா் க.லெனின்பாரதி ஒருங்கிணைத்தாா்.

இந்தப் பயிலரங்க நிகழ்வானது நவம்பா் 15, 22-ஆம் தேதிகளில் ஆசிரியா்களுக்கும், நவம்பா் 29 -ஆம் தேதி தலைமை ஆசிரியா்கள், முதல்வா்களுக்கும் நடைபெறவுள்ளது.

இதில், பங்கேற்க விரும்புவோா் 85239-09178, 96553-12329 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.