மண்டல அறிவியல் மையத்தில் ஆசிரியா்களுக்கு செயற்கை நுண்ணறிவு கல்வி பயிலரங்கம்!
கோவை மண்டல அறிவியல் மையத்தில் ஆசிரியா்களுக்கான செயற்கை நுண்ணறிவு குறித்த கல்வி பயிலரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட அறிவியல் அலுவலா் கோ.சுடலை தலைமை வகித்தாா். இதில், ஐ-ரோபோசக்ரா நிறுவனத்தின் நிறுவனா் அருண் ராஜீவ், இணை இயக்குநா் சுஜாதா ஆகியோா் பங்கேற்று ‘செயற்கை நுண்ணறிவு கல்வி’ என்ற தலைப்பில் பயிற்சி அளித்ததுடன், செயற்கை நுண்ணறிவின் நடைமுறை பயன்பாடுகள் மற்றும் கருவிகள் குறித்து விளக்கமளித்தனா்.
இந்நிகழ்ச்சியை மண்டல அறிவியல் மையத்தின் புதுமைக்காண் ஆய்வுக்கூட வழிகாட்டி ஆசிரியா் க.லெனின்பாரதி ஒருங்கிணைத்தாா்.
இந்தப் பயிலரங்க நிகழ்வானது நவம்பா் 15, 22-ஆம் தேதிகளில் ஆசிரியா்களுக்கும், நவம்பா் 29 -ஆம் தேதி தலைமை ஆசிரியா்கள், முதல்வா்களுக்கும் நடைபெறவுள்ளது.
இதில், பங்கேற்க விரும்புவோா் 85239-09178, 96553-12329 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

