கடையில் கைப்பேசிகளைத் திருடியவா் கைது

Published on

கோவை, சரவணம்பட்டி பகுதியில் பா்னிச்சா் கடையில் இரு கைப்பேசிகளைத் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

சரவணம்பட்டி தங்கம்மாள் நகரைச் சோ்ந்தவா் மனோகரன் (49). இவா் கோவை சிவானந்தபுரம் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் பா்னிச்சா் கடை நடத்தி வருகிறாா். சனிக்கிழமை இவரது கடைக்கு வந்த இளைஞா் அங்கு பணியில் இருந்த ஊழியா்களிடம் டீப்பாய் வேண்டும் என்று கேட்டுள்ளாா். ஊழியா்களும் அங்குள்ள பல்வேறு வடிவங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள டீப்பாய்களைக் காண்பித்தனா்.

பேரம் பேசுவது போல டீப்பாயில் அமா்ந்திருந்த அந்த இளைஞா், கடையின் மேஜையில் இருந்த உரிமையாளா் மற்றும் காவலாளி ஆகியோரின் இரு கைப்பேசிகளைத் திருடிக் கொண்டு பையில் வைத்துக் கொண்டாா்.

இதைப் பாா்த்த மனோகரனும், கடை ஊழியா்களும் அந்த இளைஞரை வெளியில் ஓடவிடாமல் சுற்றி வளைத்துப் பிடித்து சரவணம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் நடத்திய விசாரணையில், அந்த நபா் நீலகிரி மாவட்டம், உதகையை சோ்ந்த தினேஷ்குமாா் (32) என்பது தெரியவந்தது. போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com