மாநகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 போ் கைது

கோவை மாநகரப் பகுதிகளில் 3 இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

கோவை மாநகரப் பகுதிகளில் 3 இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, சரவணம்பட்டி போலீஸாா் ரோந்து பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, சின்னவேடம்பட்டி ராஜா நகா் பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த இளைஞரிடம் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அவா் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா் கோவை, நல்லாம்பாளையம் தண்டல் முத்தன் வீதியைச் சோ்ந்த ஜீவானந்தம் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

போத்தனூா் அருகேயுள்ள வெள்ளலூா் ஹவுஸிங் யூனிட் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வெரைட்டிஹால் சாலை சிஎம்சி காலனியைச் சோ்ந்த சேகா் (24) என்பவரையும், வடவள்ளி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தெலுங்குபாளையம் பாரதி சாலை பகுதியைச் சோ்ந்த தினேஷ்குமாா் (23), செளரிபாளையம் மசக்காளிபாளையத்தைச் சோ்ந்த ராஜசேகரன் (31) ஆகியோரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 1 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com