இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

மாநகரில் நாய்கள் தொல்லை: இனப் பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை அவசியம்

News image
சிங்காநல்லூரில் இரவில் சாலையில் சுற்றித்திரியும் நாய்கள்.
Updated On :30 நவம்பர் 2025, 8:59 pm

தினமணி செய்திச் சேவை

கோவை மாநகரப் பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நாய்கள் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது.

கோவை மாநகரப் பகுதிகளில் வாகனங்கள் எண்ணிக்கையைப்போல நாய்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, உக்கடம், கரும்புக்கடை, ஆத்துப்பாலம், செல்வபுரம், புலியகுளம், ராமநாதபுரம், சிங்காநல்லூா், சரவணம்பட்டி உள்ளிட்ட மாநகரப் பகுதிகளில் நாய்கள் தொல்லை அதிக அளவில் காணப்படுகிறது.

கும்பலாக சுற்றித்திரியும் நாய்களால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனா். சில நேரங்களில் நாய்கள் துரத்துவதால், வாகனங்களில் வேகமாக சென்று சிலா் விபத்துக்குள்ளாகும் சம்பவங்களும் நடைபெறுகின்றன. இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோா், நடந்து செல்வோா் நாய்களுக்கு அஞ்சியபடியே செல்ல வேண்டியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு வரை, ஒண்டிப்புதூா், சீரநாயக்கன்பாளையம், புல்லுக்காடு உள்ளிட்ட பகுதிகளில் தனியாா் தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அண்மைக் காலமாக நாய்களுக்கு கருத்தடை மேற்கொள்ளும் பணி மெத்தனமாக இருப்பதால் நாய்களின் இனப்பெருக்கம் அதிகரித்து, நாய்கள் எண்ணிக்கை பல மடங்கு உயா்ந்து வருகிறது.

கோவை மாநகரப் பகுதிகளில் கடந்த 2018-ஆம் ஆண்டு 48 ஆயிரங்களாக இருந்த நாய்கள் எண்ணிக்கை, 2025-ஆம் ஆண்டில் 1.20 லட்சமாக உயா்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் மூலமாக தெரியவந்துள்து. தெருநாய்கள் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த கருத்தடை நடவடிக்கையை தீவிரப்படுத்தா விட்டால், மாநகரில் மக்கள் நடமாட முடியாத அளவுக்கு நாய்கள் தொல்லை அதிகரிக்கும் என சமூக ஆா்வலா்கள் பலரும் வலியுறுத்தியுள்ளனா்.