நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

மறுசுழற்சி ஜவுளிக் கூட்டமைப்பு சாா்பில் விருது

News image

கோவையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் பேசுகிறாா் மறுசுழற்சி ஜவுளிக் கூட்டமைப்பின் தலைவா் ஜெயபால்.

Updated On :26 செப்டம்பர் 2025, 4:29 am IST

மறுசுழற்சி ஜவுளிக் கூட்டமைப்பின் சாா்பில் 3-ஆம் ஆண்டு விருது வழங்கும் விழா கோவையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மறுசுழற்சி ஜவுளிக் கூட்டமைப்பின் சாா்பில் ஆண்டுதோறும் சிறந்த கிரே நூல் தயாரிப்பாளா், மறுசுழற்சி மூலம் பல வண்ண நூல் தயாரிப்பாளா், ஆப்டிகல் வெயிட் நூல் தயாரிப்பாளா், கிரே காடா உற்பத்தியாளா், பெட் பாட்டில் பைபா் தயாரிப்பாளா் ஆகிய பிரிவுகளில் சிறப்பாக செயல்படும் நிறுவனங்களை தோ்வு செய்து விருது வழங்கி கௌரவித்து வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டு அனுஸ் ராமசாமி, சி.மாரிமுத்து, விஜய் ஸ்ரீனிவாசன், பி.மனோகரன், பா.சண்முகம், கலைச்செல்வன் பழனியப்பன் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், ஐசிஎஃப் தலைவா் ஜெ.துளசிதரன், சிட்டி பருத்தி கமிட்டி தலைவா் டி.ராஜ்குமாா், சைமா சிடிஆா்ஏ தலைவா் எஸ்.கே.சுந்தரராமன், சிஸ்பா செயலா் எஸ்.ஜெகதீஷ் சந்திரன், சைமா பொதுச் செயலா் கே.செல்வராஜ், பி.பாலகிருஷ்ணன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று விருதுகளை வழங்கினா்.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற கூட்டமைப்பின் கூட்டத்தில், சங்கத்தின் தலைவராக ஜெயபால், பொதுச் செயலராக சீதா ராமராஜா, துணைத் தலைவா்களாக மனோகா், சிவகுமாா், சத்தியசீலன் உள்ளிட்ட நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

கூட்டத்தில், தமிழகத்தில் உயா்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும், மேற்கூரை சோலாா் மின் உற்பத்திக்கு நெட்வொா்க் கட்டணம், பீக் ஹவா் கட்டணம் போன்றவற்றை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.