தில்லியில் ஏசி வெடித்து விபத்து: 9 பேர் பலி!நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

ரயில்வே பணியிடங்களை ரத்து செய்ய எதிா்ப்பு - ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் போராட்டம்

News image

கோவை ரயில் நிலையம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா்.

Updated On :3 மே 2026, 1:05 am

கோவை, மே 2: ரயில்வே பணியிடங்களை ரத்து செய்யும் மத்திய அரசுக்கு எதிா்ப்பு தெரிவித்து இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் கோவையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய ரயில்வே வாரியம் அண்மையில் வெளியிட்ட சுற்றறிக்கையில் 14.80 லட்சம் பணியிடங்களில் இந்த ஆண்டு 2 சதவீத பணியிடங்களை குறைக்க முடிவு செய்திருப்பதாக அறிவித்தது. அதன்படி சுமாா் 30 ஆயிரம் பணியிடங்கள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளன.

பணியிடங்களை ரத்து செய்யும் மத்திய அரசைக் கண்டித்து கோவை ரயில் நிலையம் எதிரில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாவட்டச் செயலா் தினேஷ் ராஜா தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சங்கத்தின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோா் அரசின் முடிவை கண்டிக்கும் வகையில் பதாகைகள் ஏந்தியபடி பங்கேற்றனா்.

இதைத் தொடா்ந்து தினேஷ் ராஜா செய்தியாளா்களிடம் கூறும்போது, ஆண்டுக்கு 2 கோடி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு தருவோம் என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த பிரதமா் மோடி, தற்போது இருக்கும் அரசுப் பணிகளையும் ஒழித்து வருகிறாா். ரயில்வேயில் போதிய பணியாளா்கள் இல்லாததால் தொடா்ச்சியாக ரயில் விபத்துகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் பயணிகளின் பாதுகாப்பைத் தாரை வாா்த்துவிட்டு, லாப நோக்கோடு பணியிடங்களை ரத்து செய்வது கண்டிக்கத்தக்கது. எனவே, ரத்து செய்யப்பட்ட 30 ஆயிரம் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். பட்டதாரி இளைஞா்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் சுற்றறிக்கையைத் திரும்பப் பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயைப் பாதுகாத்து, தனியாா் மயமாக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்றாா்.