திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைத்தல், பராமரிப்புக்கு இலவசப் பயிற்சி

சூரியமித்ரா திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைத்தல், பராமரிப்பது குறித்து மூன்று மாதங்களுக்கு இலவசப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

Updated On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

சூரியமித்ரா திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைத்தல், பராமரிப்பது குறித்து மூன்று மாதங்களுக்கு இலவசப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இது குறித்து கோவையில் நேர்டு அமைப்பின் தலைவர் சத்யஜோதி, இயக்குநர் காமராஜ் ஆகியோர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

நேர்டு தொண்டு நிறுவனம், கரிம எரிவாயுக் கலன்கள், புகையில்லாத மேம்படுத்தப்பட்ட அடுப்புகள், சூரியக் கருவிகள் போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களைப் பிரபலப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் மற்றும் தமிழக அரசின் தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி நிறுவனத்தின் நிதி உதவியுடன் மூன்று மாத இலவசப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இதில், சூரியமித்ரா திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைத்தல், பராமரித்தல் குறித்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதில், கலந்து கொள்பவர்களுக்கு இலவசமாக தங்குமிடமும், உணவும் வழங்கப்படும்.

இப்பயிற்சிக்குப் பிறகு அரசின் சான்றிதழ், சூரிய சக்தி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும். மார்ச் 8-ஆம் தேதி முதல் ஜூன் 6-ஆம் தேதி வரை கோவை வடவள்ளியில் அமைந்துள்ள நேர்டு நிறுவன வளாகத்தில் இப்பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது.

பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ.யில் எலக்ட்ரீஷியன், வயர்மென், எலக்ட்ரானிக்ஸ் அல்லது எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் ஆகியவற்றில் பட்டயப் படிப்புப் படித்திருக்க வேண்டும்.

இதில் கலந்து கொள்ள விரும்புவோர் தங்களது கல்வித் தகுதி, வயது, சாதிச் சான்றிதழ் ஆகியவற்றுடன் மார்ச் 5ஆம் தேதிக்குள் 0422-2422689, 9443934139 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்க வேண்டும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.