திருமண மண்டபங்களில் பாலிதீன் பொருள்கள் பயன்படுத்தத் தடை
திருமண மண்டபங்களில் பாலிதீன் பொருள்களைப் பயன்படுத்தத் தடை விதித்து மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.


திருமண மண்டபங்களில் பாலிதீன் பொருள்களைப் பயன்படுத்தத் தடை விதித்து மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, அனைத்து திருமண மண்டபங்களுக்கு மாநகராட்சி சார்பில் அனுப்பப்பட்டுள்ள அறிக்கை விவரம்:
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் பாலிதீன் பொருள்கள் பயன்பாடு அதிகரித்து வருவதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
மேலும், ஒருமுறையே பயன்படுத்தப்படும் பாலிதீன் பைகளை முறையின்றி பல இடங்களில் வீசுவதாலும், அவை மக்கும் தன்மை இல்லாத காரணத்தாலும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே, கோவை மாநகராட்சிப் பகுதிகளில் மே-1 ஆம் தேதி முதல் 50 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பாலிதீன் பொருள்களை விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்துத் திருமண மண்டபங்களிலும் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளைத் தரம் பிரித்து வழங்கவேண்டும்.
பாலிதீன் கப்புகள், டம்ளர்கள், தட்டுகள் முதலியவற்றைப் பயன்படுத்தக் கூடாது. அவை, மக்கும் தன்மை இல்லாததால் சுற்றுப்புறச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், இவற்றில் மழை நீர் தேங்கி கொசுப் புழுக்கள் உற்பத்தியாக வாய்ப்பு உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட சமையல் ஒப்பந்ததாரர்களிடம் குப்பைகளைத் தரம் பிரித்து வழங்குவது குறித்தும், பாலிதீன் பயன்பாடு தவிர்ப்பது குறித்தும் திருமண மண்டபங்களின் உரிமையாளர்களும், உறுதி செய்யவேண்டும்.
மேலும், பிளாஸ்டிக் உபயோகப்படுத்தப்படுவதில்லை எனும் பதாகைகள் வைக்கவேண்டும்.
அந்த உத்தரவை மீறி, பாலிதீன் பொருள்கள் பயன்படுத்தப்பட்டால் மண்டபத்தின் உரிமையாளர்களே அதற்கு பொறுப்பு. அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...