மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

இன்று முழு அடைப்புப் போராட்டம்: பாதுகாப்புப் பணியில் 3 ஆயிரம் காவலர்கள்

கோவை மாவட்டத்தில் முழு அடைப்புப் போராட்டத்தை ஒட்டி அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் சுமார் 3 ஆயிரம்

Updated On :5 ஏப்ரல் 2018, 6:50 am IST

கோவை மாவட்டத்தில் முழு அடைப்புப் போராட்டத்தை ஒட்டி அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் சுமார் 3 ஆயிரம் காவலர்கள் வியாழக்கிழமை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுவதிலும் கடந்த சில நாள்களாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் வியாழக்கிழமை (ஏப்ரல் 5) முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக வணிகர் சங்கங்கள் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்களும் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளன.
இதனால், கோவை மாநகரில் அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் சுமார் 2 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 
அதே போல், கோவை புறநகர் காவல் எல்லைக்கு உள்பட்ட சூலூர், பொள்ளாச்சி, கருமத்தம்பட்டி, பேரூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரம் காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 
மேலும்,  தொழிற்சங்களும் வேலைநிறுத்தத்தில்  ஈடுபடுவதால் காவல் துறையினரின் பாதுகாப்புடன் அரசுப் பேருந்துகளை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.