வால்பாறை நகரப் பகுதியில் இரவு நேரத்தில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
வால்பாறை வனப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான சிறுத்தைகள் உள்ளன. தற்போது வால்பாறை நகரப் பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டம் காணப்படுகிறது. நகரில் உள்ள வங்கி, கடைகள் முன்புறம் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராக்களில் சிறுத்தை நடமாட்டம் அண்மையில் பதிவாகியிருந்தது.
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு வாழைத்தோட்டம் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த சிறுத்தை வீட்டுக்கு மாடியில் இருந்த நாயைப் பிடித்துச் சென்றது. பாரத ஸ்டேட் வங்கி சாலையில் இருந்து அண்ணா நகர் செல்லும் படிக்கட்டில் செவ்வாய்க்கிழமை இரவு 11 மணி அளவில் மூன்று சிறுத்தைகள் சென்றுள்ளன.
இதனையடுத்து, அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் பெரிய தடிகளுடன் நடந்து சென்றனர். சிறுத்தைகளை கூண்டு வைத்துப்பிடிக்க வேண்டும் என்று வனத் துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அயோத்தி ராமா் கோயில் முறைகேடு! சட்ட அதிகாரமில்லா விசாரணைக் குழு என கேஜரிவால் குற்றச்சாட்டு!

என்சிஇஆர்டி 9-ம் வகுப்பு புத்தகத்தில் அவசரநிலை குறித்த பாடம் சேர்ப்பு!

இன்றைய செய்திகள் ஜூன் 25 - நேரலை

இரண்டாம் பாதியில் களமிறங்கிய நெய்மர்: நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது பிரேசில்!
விடியோக்கள்

UN Kannan Interview | விஜய், உதயநிதி மோதல் தொடர்ந்தால்...? | CM Vijay | TVK | Udhayanidhi | DMK

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |


