உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

லாரி மோதி 28 ஆடுகள் சாவு

சின்னத் தடாகத்தையடுத்த ஆனைகட்டியில் சாலையில் சென்றுகொண்டிருந்த ஆடுகள் மீது லாரி மோதியதில் 28 ஆடுகள் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தன.

Updated On :18 ஏப்ரல் 2018, 9:24 am IST

சின்னத் தடாகத்தையடுத்த ஆனைகட்டியில் சாலையில் சென்றுகொண்டிருந்த ஆடுகள் மீது லாரி மோதியதில் 28 ஆடுகள் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தன.
சூலூரைச் சேர்ந்தவர் ஜோதி. இவர், ஊர்ஊராகச் சென்று, தோட்டங்களில் பட்டி அமைத்து, தனது ஆடுகளை மேய்த்து விட்டு வருவது வழக்கம். இந்நிலையில், ஆனைகட்டியில் மேய்ச்சலை முடித்துவிட்டு ஆடுகளுடன் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, அங்குள்ள தொலைபேசி நிலையம் அருகே, வளைவில் வேகமாக வந்த லாரி ஆடுகளின் மீது மோதியது. இதில், 28 ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.  இதையடுத்து, கவனக்குறைவாக லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் கெளதமிடம் துடியலூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.