திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

சேலம் அருகே  பாலம் அமைக்கும் பணி: 20-ஆம் தேதி வரை ரயில்கள்15 நிமிடங்கள் தாமதமாகச் செல்லும்

சேலம் அருகே பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால் ஏப்ரல் 20-ஆம் தேதி வரை சேலத்தில் இருந்து ரயில்கள் 15 நிமிடங்கள் தாமதமாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On :18 ஏப்ரல் 2018, 9:23 am IST

சேலம் அருகே பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால் ஏப்ரல் 20-ஆம் தேதி வரை சேலத்தில் இருந்து ரயில்கள் 15 நிமிடங்கள் தாமதமாக செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி: 
சேலம் ரயில் நிலையம் அருகே உள்ள போடிநாயக்கன்பட்டியை சேலம் நகரத்துடன் இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே, சேலத்தில் இருந்து கோவை வழியாகச் செல்லும் ரயில்கள் 15 நிமிடங்கள் தாமதமாகப் புறப்பட்டுச் செல்லும் 
அதன்படி வண்டி எண் 12648-கோவை-கொங்கு எக்ஸ்பிரஸ், வண்டி எண் 13351-தன்பாத்- ஆலப்புழை, வண்டி எண் 12516-குவாஹட்டி - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், வண்டி எண்-12677 பெங்களூர்-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ், வண்டி எண் 12675-சென்னை சென்ட்ரல்-கோவை சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், வண்டி எண் 12243-சென்னை - கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ், வண்டி எண் 22637-சென்னை சென்ட்ரல் - மங்களூர் வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் சேலம் ரயில் நிலையத்தில் 15 நிமிடம் தாமதமாகப் புறப்பட்டுச் செல்லும். மேலும், கோவை - சேலம் பயணிகள் ரயில் மற்றும் சரக்கு ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.