இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

அரசுப் பள்ளிகளில் சுதந்திர தினவிழா

சின்னத்தடாகத்தில் உள்ள பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுதந்திரதினவிழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

Published On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

சின்னத்தடாகத்தில் உள்ள பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுதந்திரதினவிழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. சின்னதடாகம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் டி.என்.வேலுசாமி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை ஷீலா வரவேற்றார். கோவை ஸ்பார்க் சுழற் சங்கத்தின் துணைத் தலைவர் கெளசிக், செயலாளர் சுஜய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத் தலைவர் பங்கஜ் கபூர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். 
தொடர்ந்து நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 
வால்பாறையில்...
பழங்குடியின மாணவர்கள் படிக்கும் வால்பாறையில் உள்ள நேசம் ட்ரஸ்ட் உண்டு உறைவிடப் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. நேசம் ட்ரஸ்ட் அமைப்பின் மேலாண்மை இயக்குநர் செந்தில்குமார் தலைமை வகித்தார். விழாவில் உயர் நீதிமன்றம் நீதிபதி வள்ளிநாயகம் பங்கேற்று தேசியக்கொடியை ஏற்றி வைத்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். சினிமா இயக்குநர் கதிர், நகராட்சி ஆணையாளர் ராஜகோபால் உள்பட பலர் பங்கேற்றனர்.  
இதேபோல் வால்பாறை நகராட்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், காவல் நிலையம், கிளை நூலகம் மற்றும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
மதுக்கரையில்...
மதுக்கரை ஸ்ரீ பி.மல்லையன் தனியார் பள்ளியில் புதன்கிழமை சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி தலைவர் துரைசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பள்ளி செயலர் சண்முகம், பொருளாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் ரேகா மணிகண்டன் வரவேற்றார். விழாவில், மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.