9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

மேட்டுப்பாளையத்தில் இருந்து நிவாரணப் பொருள்கள்,  இரு மருத்துவக் குழுவுடன் சென்ற சமூக ஆர்வலர்கள்

மேட்டுப்பாளையம் பகுதியிலி இருந்து ரூ. 25லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருள்களுடன் கேரள மாநிலம், வயநாடு மாவட்டப் பகுதிகளுக்குச்

Updated On :20 ஆகஸ்ட் 2018, 8:47 am IST

மேட்டுப்பாளையம் பகுதியிலி இருந்து ரூ. 25லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருள்களுடன் கேரள மாநிலம், வயநாடு மாவட்டப் பகுதிகளுக்குச் சென்ற பொதுநல அமைப்பினர் மரக்கடவு என்ற பகுதியில் நிவாரண பொருள்களை வழங்கினர். 
மேட்டுப்பாளையம் சிறப்பு மருத்துவர்கள் மகேஸ்வரன் (சுபா மருத்துவமனை), விஜயகிரி (எஸ்ஜிகே மருத்துவமனை) தலைமையில் மருத்துவக் குழுவினர் அப்பகுதி மக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகளை இலவசமாக வழங்கினர். 
கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவும் வகையில் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த பல்வேறு சமூக, பொதுநல அமைப்பினர்கள் ஒன்றிணைந்து நிவாரணப் பொருள்களை சேகரித்தனர். பொதுமக்கள் அரிசி, சமையல் எண்ணெய், காய்கறிகள், மருந்துகள், ஆடைகள், உள்ளாடைகள், பாய், போர்வைகள் என பல்வேறு பொருள்களை வழங்கினர். 
இதையடுத்து சனிக்கிழமை நள்ளிரவு ரூ. 25 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்களை இரு லாரிகளில் ஏற்றிக்கொண்டு 20பேர் அடங்கிய சமூக ஆர்வலர்கள் கேரளத்துக்குச் சென்றனர். அவர்களுடன் மருத்துவக் குழுவினரும் சென்றனர். உதகை வழியாகச் சென்ற இவர்கள் கூடலூர், சுல்தான்பத்தேரி கடந்து வயநாடு மாவட்டம், மரக்கடவு,  பெரிக்கல்லூர் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நிவாரணப் பொருள்களை வழங்கினர். 
அப்பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் நீண்ட வரிசையில் காத்திருந்து அரிசி, எண்ணெய், பாய், குடிநீர் உள்ளிட்ட பொருள்களை பெற்றுச் சென்றனர். அப்பகுதி மக்களுக்கு மருத்துவர்கள் மகேஸ்வரன், விஜயகிரி தலைமையில் நடைபெற்ற மருத்துவ முகாமில் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு மருந்துகளும் வழங்கப்பட்டன.
 தொடர்ந்து 65 கி.மீ. தூரத்தில் உள்ள கல்பெட்டா பகுதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு  நிவாரணப் பொருள்கள் வழங்கும் பணியும், மருத்துவ முகாமும் நடைபெறும் என தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.