ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

பொள்ளாச்சியில் உத்தரவை மீறி திறக்கப்பட்ட மாட்டுச் சந்தை மூடல்

பொள்ளாச்சியில் ஆட்சியர் உத்தரவையும் மீறி செவ்வாய்க்கிழமை செயல்பட்ட மாட்டுச் சந்தை நகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தல்படி மூடப்பட்டது.

Updated On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

பொள்ளாச்சியில் ஆட்சியர் உத்தரவையும் மீறி செவ்வாய்க்கிழமை செயல்பட்ட மாட்டுச் சந்தை நகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தல்படி மூடப்பட்டது.
கோமாரி நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேலும் இரண்டு வாரங்களுக்கு பொள்ளாச்சி மாட்டுச் சந்தையை மூடுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், ஏற்கெனவே கடந்த இரண்டு வாரங்களாக மூடப்பட்டிருந்த பொள்ளாச்சி மாட்டுச் சந்தை செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது.  விற்பனைக்காக 500க்கும் அதிகமான மாடுகள் கொண்டுவரப்பட்டன. 
இது குறித்த தகவல் கிடைத்ததும் பொள்ளாச்சி நகராட்சி அதிகாரிகள் மாட்டுச் சந்தைக்குச் சென்று வியாபாரிகளிடமும், விவசாயிகளிடமும் மாடுகளை விற்பனை செய்யக்கூடாது என்றும்,  இந்த மாதம் முழுவதும் மாட்டுச் சந்தைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து, மாட்டுச் சந்தை மூடப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.