கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தனியார் துறையில் வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 7) வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இது குறித்து ஆட்சியர் த.ந.ஹரிஹரன், வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறும் வகையில் வேலை அளிப்போர், வேலை தேடுவோர் சந்திப்பு நிகழ்ச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் நடைபெறுகிறது.
இந்த முகாமில் படிக்காதவர்கள் முதல் படித்தவர்கள் வரையில் அனைவரும் பங்கேற்கலாம். இதில் பிட்டர், டர்னர், கணினி இயக்குபவர், டெய்லர், டேட்டா என்டரி ஆப்ரேட்டர் போன்ற தொழில் கல்வி பயின்றவர்களும் பங்கேற்கலாம்.
இந்த முகாமில் தனியார் துறையில் வேலை அளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்று தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இம் முகாமில் பங்கேற்க எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. மேலும் தேர்வு செய்யப்படும் நபர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







