கோவையில் மனநலம் பாதிக்கப்பட்ட மகனின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த தந்தையை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கோவை, பூ மார்க்கெட், தெப்பக்குளம் லிங்கப்பசெட்டி தெருவைச் சேர்ந்தவர் முத்து (70). ஆர்.எஸ்.புரத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி வேலம்மாள் (65). சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். இவர்களது மகன் கணேசன் (40), மகள் ராதா (38). இவர்களுக்குத் திருமணம் நடைபெறவில்லை.
மனநலம் பாதிக்கப்பட்டிருந்த கணேசன், கடந்த 20 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கணேசன் கடந்த சில மாதங்களாக முத்துவைத் தாக்கி காயப்படுத்தி வந்துள்ளார். மேலும், வீட்டின் அருகில் இருப்பவர்களைத் தாக்கியும், பொருள்களை சேதப்படுத்தியும் வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ராதா வீட்டில் இல்லாத நேரத்தில் திங்கள்கிழமை இரவு கணேசனுக்கு மயக்க மருந்து கொடுத்த முத்து, அவரது தலையில் அம்மிக்கல்லைப் போட்டுக் கொலை செய்துள்ளார். பின்னர் உறவினர்களைத் தொடர்பு கொண்டு, தொந்தரவு செய்து வந்த மகனைக் கொன்று விட்டேன். மகளைப் பார்த்துக் கொள்ளுங்கள் என கூறிவிட்டு ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
இதையடுத்து, கணேசனின் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீஸார், இது தொடர்பாக முத்துவைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்... ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!

வீட்டில் போர்வை, தலையணையை எப்போது துவைத்தீர்கள்? நினைவிருக்கிறதா?

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற இலங்கை அணி!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!
விடியோக்கள்
கண்ணதாசன் கவிஞரான கதை| Kannadasan 100 | UN Kannan interview | Kaviyarasu|கண்ணதாசன் நூற்றாண்டு | EP -2


