இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

விதிகளுக்குப் புறம்பாக நல்லாசிரியர் விருது: கலை ஆசிரியர்கள் நலச் சங்கம் குற்றச்சாட்டு

கோவையில் புகாரில் சிக்கியுள்ள ஆசிரியர் நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும், இது தொடர்பாக முதன்மைக் கல்வி

Published On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

கோவையில் புகாரில் சிக்கியுள்ள ஆசிரியர் நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும், இது தொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கலை ஆசிரியர்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக சங்கத் தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார், கோவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனு விவரம்:
மாநில நல்லாசிரியர் விருது தேர்வுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள கோவை அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி ஓவிய ஆசிரியர் புத்தகம் பதிப்பித்து விற்பனை செய்து வருகிறார். அரசு ஊழியர் ஒருவர் புத்தகம் வெளியிடுவதற்கு துறைத் தலைவரின் அனுமதியைப் பெற வேண்டும். மேலும், அரசு ஊழியர் யாரும் எந்தத் தொழிலும் செய்யக் கூடாது, ஊழியரின் மனைவியோ, கணவரோ ஏதேனும் தொழில் செய்தால் அந்த விவரத்தையும் துறைத் தலைவருக்குத் தெரிவிக்க வேண்டும் என்று விதிகள் உள்ளன.
இந்த விதிகளுக்குப் புறம்பாக நடந்து கொண்டிருப்பவரை நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யக் கூடாது என்று கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதியே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளோம். இந்தப் புகார் இன்றைய தேதி வரையிலும் நிலுவையில் இருப்பதாகவே அரசுத் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், கல்வியை வணிகரீதியாகக் கருதி செயல்படுபவரை நல்லாசிரியர் விருதுக்காக, முதன்மைக் கல்வி அலுவலர் விதிகளுக்குப் புறம்பாகப் பரிந்துரைத்துள்ளார்.
அத்துடன், கோவையில் அரசுப் பள்ளி ஓவிய ஆசிரியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வரும்போது, அவர்களைப் புறக்கணித்துவிட்டு உதவி பெறும் பள்ளி ஆசிரியரைத் தேர்வு செய்த விவகாரத்திலும் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ராஜ்குமார் வலியுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.