கோயில்களில் தொடர் திருட்டில் ஈடுபட்டவர்களைக் கண்டறிந்து கைது செய்த சூலூர் காவல் துறையினருக்கு கோவை காவல் கண்காணிப்பாளர் செவ்வாய்க்கிழமை பாராட்டி வெகுமதி அளித்தார்.
சூலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் கோயில்களில் தொடர்ந்து திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்றுவந்தன. இதில் எந்த ஒரு தடயமும் கிடைக்காததால் குற்றவாளிகளைப் பிடிப்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டிருந்தது. அப்போது ஒரு கிராமத்தில் சில்லறை நாணயங்களை மாற்ற முயன்றது பற்றி தகவல் அறிந்த தனிப் பிரிவு காவலர் செந்தில், தனிப்படையினருக்கு உடனடியாக தகவல் கொடுத்து விரைந்து சென்று முக்கிய குற்றவாளியைப் பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணை அடிப்படையில் அனைத்து குற்றவாளிகளும் பிடிபட்டனர்.
இதில் தனிப்படையில் பணியாற்றிய கருமத்தம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் பாஸ்கர், சூலூர் காவல் ஆய்வாளர் தங்கராஜ், உதவி ஆய்வாளர்கள் லெனின் அப்பாதுரை, அருண், ஜெகநாதன், காவலர்கள் மஹாராஜன், செல்லதுரை, தனிப் பிரிவு காவலர் செந்தில், காவலர் நண்பர்கள் படையை சேர்ந்த வெற்றி உள்ளிட்டோருக்கு கோவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் பாராட்டுத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








