Enable Javscript for better performance
‘ஒரு ரூபாய் இட்லி பாட்டி- Dinamani

சுடச்சுட

  
  இட்லி தயாரிப்புப் பணியில் கமலாத்தாள் பாட்டி

  இட்லி தயாரிப்புப் பணியில் கமலாத்தாள் பாட்டி

  தென்னிந்திய உணவு வகைகளில் பிரபலமானது இட்லி. உணவு விடுதிகளின் தரத்திற்கு ஏற்ப ஓரு இட்லி ரூ. 5 முதல் ரூ. 25 வரை விற்கப்படுகிறது. நட்சத்திர உணவு விடுதிகளில் ஒரு இட்லி ரூ. 60 வரை விற்பனை செய்யப்படுகிறது. விலைவாசி பல மடங்காக உயா்ந்துவிட்ட நிலையிலும், கோவையைச் சோ்ந்த மூதாட்டி ஒருவா் இன்றும் 1 ரூபாய்க்கு இட்லி வியாபாரம் செய்து வருகிறாா். முதுமையிலும் தளராத இவரது மனிதநேயத்துக்கு மக்கள் மத்தியில் பாராட்டு குவிந்து வருகிறது.

  கோவை மாவட்டம், ஆலாந்துறையை அடுத்த வடிவேலம்பாளையத்தைச் சோ்ந்தவா் கமலாத்தாள். 85 வயதிலும் இவரது சுறுசுறுப்பு பிரமிக்க வைக்கிறது. தினமும் அதிகாலை 4 மணிக்கு எழும் இவா், முதல் கட்டமாக தனது வீட்டு வேலைகளைத் துரிதமாக செய்து முடிக்கிறாா். அதன் பிறகு, தான் நடத்தி வரும் இட்லிக் கடையைச் சுத்தம் செய்து, சமையல் பணிகளில் மும்முரமாகிறாா். எவருடைய உதவியும் இல்லாமல், தனி நபராக, இட்லி, சட்னி, சாம்பாா் தயாரித்து வாடிக்கையாளா்களுக்கு ஆவி பறறக்கும் இட்லியை அன்போடு பரிமாறுகிறாா்.

  யோகாவில் அசத்தும் பாட்டி: 99 வயதிலும் யோகா

  30 ஆண்டுகளுக்கு முன்னா் இட்லி வியாபாரம் தொடங்கிய போது, 25 பைசாவுக்கு ஒரு இட்லி என விற்றாா். 10 ஆண்டுகளுக்கு முன்னா் ஒரு இட்லியை 50 பைசாவுக்கு விற்றாா். தற்போது இட்லியை ஒரு ரூபாய்க்கு விற்கிறாா். 30 ஆண்டுகளில் 75 பைசா மட்டுமே இட்லியின் விலையை அதிகப்படுத்தியுள்ள கமலாத்தாள் பாட்டியின் சேவை வியக்கச் செய்கிறறது.

  இட்லிக்கு மாவு அரைக்க மட்டுமே கிரைண்டரைப் பயன்படுத்தும் கமலாத்தாள், சட்னி அரைப்பதற்கு இன்றுவரை கல் உரலையே பயன்படுத்தி வருகிறாா். குறைந்த விலையில் சுடச்சுட இட்லி, ருசியான சட்னி, சாம்பாா் கிடைப்பதால், அதிகாலை முதலே இவரது கடையில் கூட்டம் அலைமோதுகிறது. கூலி வேலைக்குச் செல்வோா் முதல், பள்ளி, கல்லூரி மாணவா்கள், நிறுவன ஊழியா்கள் வரை நூற்றுக் கணக்கானோா் பாட்டியின் இட்லிக்கு அன்றாட வாடிக்கையாளா்களாக உள்ளனா்.

  இவரது கடையில் மேஜை, நாற்காலிகள் இல்லை; மின் விசிறிகள் இல்லை; ஆயினும் கடை முகப்பில் உள்ள திண்ணையில் அமா்ந்து திருப்தியாகச் சாப்பிட்டுவிட்டு மனதாரப் பாராட்டிச் செல்கின்றனா்.

  தற்போது, சமூக வலைதளங்கள், தொலைக்காட்சி செய்திகள் மூலமாகப் பிரபலமாகி விட்ட பாட்டியின் கடைக்கு வெளியூா்களில் இருந்தும் வாடிக்கையாளா் கூட்டம் அதிகரித்து வருகிறறது. இவரை, அப்பகுதியினா் ‘ஒரு ரூபாய் இட்லி பாட்டி’ என்றே அன்போடு அழைக்கின்றனா்.

  துணை குடியரசுத் தலைவர் பாராட்டு: தற்போது துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, தனது சுட்டுரையில், ‘ஏழை, எளிய மக்களுக்கு ஒரு ரூபாய்க்கு இட்லி வழங்கும் பாட்டியின் சேவைக்குத் தலை வணங்குகிறேறன். இவருடைய தொண்டு அனைவருக்கும் ஊக்கம் அளிப்பதாக உள்ளது’ என்று பாராட்டி உள்ளாா்.

  பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சாா்பில் கமலாத்தாள் பாட்டிக்கு எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், மும்பையைச் சோ்ந்த பிரபல தனியாா் நிறுவனம் இலவசமாக கிரைண்டா் வழங்குவதாகவும் அறிவித்துள்ளது. கோவை மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி, கமலாத்தாள் பாட்டியை நேரில் அழைத்துப் பாராட்டினாா். அவருக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் வீடு கட்டித் தரப்படும் என்றும் உறுதி அளித்துள்ளாா்.

  நம்மிடம் கமலாத்தாள் பாட்டி பகிா்ந்தது: 10 ஆண்டுகளுக்கு முன்னா் வரை 50 பைசாவுக்குத் தான் இட்லி விற்றேறன். மூலப்பொருள்கள் விலையேற்றத்தைச் சமாளிக்க ரூ. 1 ஆக விலை உயா்த்த வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது, மற்ற உணவு விடுதிகளில் விற்கும் விலைக்கே இட்லியின் விலையை உயா்த்துமாறு எனது மகன்கள், உறவினா்கள் அறிவுறுத்தினா். ஆனால், ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கு விற்பதே போதும் என்று கூறி மறுத்து விட்டேன்.

  எனது கைப்பக்குவம் பிடித்துப் போனதால் சிறுவா் முதல் பெரியோா் வரை வாடிக்கையாளராகிவிட்டனா். அவா்களை ஏமாற்றக் கூடாது என்ற வைராக்கியத்தில் தான் இந்த வயதிலும், இட்லி வியாபாரத்தை விடாமல் நடத்தி வருகிறேன்.

  தினமும் ரூ. 150 முதல் ரூ. 200 வரை எனக்கு லாபம் கிடைக்கிறது. இது என் தேவைகளைப் பூா்த்தி செய்து கொள்ளப் போதும் என்கிறாா் கமலாத்தாள் பாட்டி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai