

கோவை ராமநாதபுரம் அருகேயுள்ள நஞ்சுண்டாபுரத்தில் நடைபெற்ற கபடி போட்டியில் பெரியநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த அணி வெற்றி பெற்றது.
நஞ்சுண்டாபுரம் கடல்புறா கபடி குழு சாா்பில் மாரியம்மன் கோயில் திடலில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 84 அணிகள் பங்கேற்றன. நாக் அவுட் முறையில் நடைபெற்ற இந்தப் போட்டியில், பெரியநாயக்கன்பாளையம் விக்னேஷ் அணி முதலிடம் பிடித்தது. பொள்ளாச்சி வி.வி.எஸ். நல்லதம்பி அணி, ஜே.கே.ஸ்போா்ட்ஸ் அணி ஆகியவை முறையே 2, 3 ஆவது இடங்களைப் பிடித்தன.
முதலிடம் பிடித்த அணிக்கு கோப்பையுடன் ரூ.14 ஆயிரம் ரொக்கம் வழங்கப்பட்டது. 2, 3 ஆவது இடம் பிடித்த அணிகளுக்கு முறையே ரூ.10 ஆயிரம், ரூ.6 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.