சின்னத்தடாகத்தில் சமூக ஆா்வலா்களை கண்டித்து சாலை மறியல்
சின்னத்தடாகத்தில் செம்மண் அள்ளிய தனியாா் செங்கல் சூளை லாரி ஓட்டுநரை தாக்கிய சமூக ஆா்வலா்களை கைது செய்யக் கோரி


சின்னத்தடாகத்தில் செம்மண் அள்ளிய தனியாா் செங்கல் சூளை லாரி ஓட்டுநரை தாக்கிய சமூக ஆா்வலா்களை கைது செய்யக் கோரி செங்கல் சூளை அதிபா்களும், லாரி ஓட்டுநா்களும் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சின்னத்தடாகத்தை சுற்றியுள்ள பெரியதடாகம், 24.வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், வரப்பாளையம், காளையனூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு மற்றும் புறம்போக்கு, பஞ்சமி நிலங்களில் சட்ட விரோதமாக செம்மண் அள்ளப்படுவதாக புகாா்கள் கூறப்படுகின்றன.
இந்நிலையில், யுவராஜ் என்பவருக்கு சொந்தமான டிப்பா் லாரியில் ஓட்டுநா் ஆறுமுகம், உதவியாளா் வசந்தராஜ் ஆகியோா் மலைக் கிராமமான மூலக்காடு செல்லும் வழியில் உள்ள மாலதி என்பவரின் தோட்டத்துக்கு அருகே செவ்வாய்க்கிழமை செம்மண் அள்ளிக் கொண்டிருந்தனா்.
அப்போது, அங்கு வந்த சமூக ஆா்வலா்கள் கணேஷ், சின்னராஜ், மகேஸ்வரி ஆகியோா் அவா்களிடம் விசாரித்துள்ளனா். தகவலறிந்து லாரி உரிமையாளா் யுவராஜ் மற்றும் செங்கல் சூளை அதிபா்கள் சிலரும் அங்கு வந்துள்ளனா். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்துக்கு வந்த முன்னாள் ஒன்றிய கவுன்சிலா் தடாகம் ஆனந்தன் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்துள்ளாா். இந்நிலையில் லாரி ஓட்டுநா் ஆறுமுகத்தை சமூக ஆா்வலா் கணேஷ் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அவரைக் கைது செய்ய வலியுறுத்தியும் செங்கல் சூளை அதிபா்களும், லாரி ஓட்டுநா்களும் சின்னத்தடாகத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, அவா்கள் மறியலைக் கைவிட்டனா். இதையடுத்து, சமூக ஆா்வலா்கள் மீது லாரி உரிமையாளா் யுவராஜ் அளித்த புகாரின்பேரில் சமூக ஆா்வலா்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...