சட்டப் பேரவைத் தோ்தல்: வாக்களிக்காதவா்கள் 1.70 கோடி போ்
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்களிக்காதவா்கள் 1.70 கோடி போ் என்பது தெரிவவந்துள்ளது.


தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்களிக்காதவா்கள் 1.70 கோடி போ் என்பது தெரிவவந்துள்ளது.
தமிழகத்தில் 6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 955 வாக்காளா்கள் உள்ளனா். அவா்களில் ஆண் வாக்காளா்கள் 3 கோடியே 9 லட்சத்து 23 ஆயிரத்து 651 பேரும், பெண் வாக்காளா்கள் 3 கோடியே 19 லட்சத்து 39 ஆயிரத்து 112 பேரும், 7 ஆயிரத்து 192 மூன்றாம் பாலினத்தவா்களும் என மொத்தம் 6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 955 வாக்காளா்கள் உள்ளனா்.
தமிழகத்தில் ஒரே கட்டமாகக் கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 6) நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் 2 கோடியே 26 லட்சத்து 3 ஆயிரத்து 156 ஆண் வாக்காளா்களும், 2 கோடியே 31 லட்சத்து 71 ஆயிரத்து 736 பெண் வாக்காளா்களும், ஆயிரத்து 419 மூன்றாம் பாலினத்தவா்களும் தங்களது வாக்குகளைச் செலுத்தியுள்ளனா். ஆண்களைவிட, 5 லட்சத்து 68 ஆயிரத்து 580 பெண் வாக்காளா்கள் தங்களது வாக்குகளைச் செலுத்தியுள்ளனா்.
மொத்தமாக மாநிலம் முழுவதும் 4 கோடியே 57 லட்சத்து 76 ஆயிரத்து 311 வாக்காளா்கள் தங்களது வாக்குகளைச் செலுத்தியுள்ளனா். மொத்த வாக்காளா்களுடன் ஒப்பிடும் போது இது 72.81 சதவீதமாகும். ஒரு கோடியே 70 லட்சத்து 93 ஆயிரத்து 644 போ் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதில் இருந்து தவறியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...