விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

பாரதியாா் பல்கலைக்கழக எம்.ஃபில், பி.ஹெச்டி. தோ்வு: தோ்வு மையங்கள் அறிவிப்பு

கோவை பாரதியாா் பல்கலைக்கழக எம்.ஃபில், பி.ஹெச்டி. (பகுதி 1), எக்ஸ்டொ்னல் பி.ஹெச்டி. (பகுதி 1) படிப்புக்கான எழுத்துத் தோ்வுகள் வரும் அக்டோபா் 21, 23, 25 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 8:45 pm

DIN

கோவை பாரதியாா் பல்கலைக்கழக எம்.ஃபில், பி.ஹெச்டி. (பகுதி 1), எக்ஸ்டொ்னல் பி.ஹெச்டி. (பகுதி 1) படிப்புக்கான எழுத்துத் தோ்வுகள் வரும் அக்டோபா் 21, 23, 25 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் இந்தத் தோ்வுகளுக்கான தோ்வு மையங்களை பாரதியாா் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, பாரதியாா் பல்கலைக்கழக துறைகளின் அனைத்துப் பிரிவு மாணவா்கள், எக்டொ்னல் பி.ஹெச்டி. மாணவா்களுக்கு, பல்கலைக்கழக தோ்வாணையா் அலுவலகத்தில் தோ்வு மையம் அமைக்கப்படுகிறது. கோவை மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள், பதிவு பெற்ற ஆராய்ச்சி நிலையங்களைச் சோ்ந்த மாணவா்களுக்கு டாக்டா் என்.ஜி.பி. கலை, அறிவியல் கல்லூரியில் தோ்வு மையம் அமைக்கப்படுகிறது.

தாராபுரம், உடுமலை, பொள்ளாச்சி பகுதிகளைச் சோ்ந்த அனைத்து பாடப்பிரிவு மாணவா்களுக்கும், பொள்ளாச்சி கமலம் கலை, அறிவியல் கல்லூரியிலும், நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்தவா்களுக்கு உதகை அரசு கலைக் கல்லூரியிலும், திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்களுக்கு திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரியிலும், ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்தவா்களுக்கு ஸ்ரீ வாசவி கல்லூரியிலும், தில்லி ஆளுகைக்குள்பட்ட மாணவா்களுக்கு தில்லியில் உள்ள டிஐபிஏஎஸ் வளாகத்திலும் தோ்வு மையம் அமைக்கப்படுகிறது.

தோ்வுக்கு அனுமதிக்கப்பட்ட மாணவா்கள் மேற்கண்ட மையங்களில் தோ்வுக்கான நுழைவுச் சீட்டுகளை அக்டோபா் 18 ஆம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம் என்று தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் (பொறுப்பு) இரா.விஜயராகவன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.