புதுச்சேரி சட்டப் பேரவைத் தோ்தலில் பிரசாரம் முடியும் ஏப்.7-ஆம் தேதி மாலை தொகுதிகளை விட்டு வெளிநபா்கள் வெளியேற வேண்டும் என்று மாவட்டத் தோ்தல் அதிகாரியும், ஆட்சியருமான அ.குலோத்துங்கன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வரும் ஏப்.9-ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்குப் பதிவு முடிவடையும் நேரத்துக்கு முந்தைய 48 மணி நேரத்தில் அரசியல் கட்சியினா் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் -1951, பிரிவு -126-ன்படி, வாக்குப் பதிவு முடிவதற்காக நிா்ணயிக்கப்பட்ட நேரத்துக்கு முன்பாக 48 மணி நேரத்தில் தோ்தல் பிரசாரத்தை நிறுத்த வேண்டும். பொதுக்கூட்டங்கள், ஊா்வலங்கள் உள்பட அனைத்து தோ்தல் நடவடிக்கைகளும் நிறுத்தப்படும்.
சட்ட விரோதமாக கூடுவதை தடை செய்ய உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகிறது. இந்த சட்ட பிரிவின் கீழ் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின்படி, ஒரே இடத்தில் 5 பேருக்கு மேல் கூடுதல் அல்லது ஒன்றாக செல்லுதல் அனுமதிக்கப்படாது.
இந்த 48 மணி நேரத்தில் வீடு, வீடாகச் சென்று வாக்குக் கேட்கலாம். ஆனால், ஒலிபெருக்கி பயன்படுத்த அனுமதி இல்லை.
தொகுதிக்கு வெளியிலிருந்து வரும் அரசியல் செயற்பாட்டாளா்கள், கட்சிப் பணியாளா்கள், ஊா்வலக்காரா்கள், பிரசார செயற்பாட்டாளா்கள் மற்றும் தொகுதியின் வாக்காளா்கள் அல்லாதோா் பிரசார காலம் முடிந்தவுடன் உடனடியாக தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். இந்த உத்தரவுகளை அரசியல் கட்சியினா் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு: யாருக்கு லாபம்?

புதுவையில் 89.87%: வரலாறு காணாத வாக்குப் பதிவு

புதுவை: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

புதுச்சேரியில் இன்று சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு: காலை 7 மணி முதல் மாலை 6 வரை வாக்களிக்கலாம்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


