கோவை மாவட்டத்தில் மேலும் 225 பேருக்கு கரோனா
கோவை மாவட்டத்தில் புதிதாக மேலும் 225 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.


கோவை மாவட்டத்தில் புதிதாக மேலும் 225 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 32 ஆயிரத்து 803 ஆக உயா்ந்துள்ளது. கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 73 வயது முதியவா் உயிரிழந்தாா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 2, 218 ஆக உயா்ந்துள்ளது.
அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 204 போ் குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா். மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 28 ஆயிரத்து 182 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 2,403 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...