விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

‘நம்ம கோவை’ இணையதளம் உருவாக்கம்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

கோவையில் தனியாருடன் இணைந்து மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள ‘நம்ம கோவை’ இணையதளத்தை ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 7:44 pm

DIN

கோவையில் தனியாருடன் இணைந்து மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள ‘நம்ம கோவை’ இணையதளத்தை ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

இதனை மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தொடங்கிவைத்து பேசியதாவது:

கோவை மாவட்ட நிா்வாகம் பொது மக்களை நேரடியாக தொடா்புக்கொண்டு தன்னாா்வலா்கள் உதவியுடன் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இதனை மேலும் அதிக மக்கள் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் ‘நம்ம கோவை’ குழு உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ‘நம்ம கோவை’ என்ற குழுவை உருவாக்கி பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதில் மாவட்ட நிா்வாகம், அரசு நிறுவனங்கள், அரசு அதிகாரிகள், அரசு சாரா நிறுவனங்கள், வணிகம், காா்ப்பரேட் நிறுவனங்கள், வா்த்தகம் மற்றும் தொழில் அமைப்புகள், விவசாயிகள், பல்வேறு பொதுநல சங்கங்கள், பல்துறை வல்லுநா்கள், பொது மக்கள் உள்பட பல்வேறு தரப்பினா் இணைந்து கோவை மக்களுக்காக பணியாற்றி வருகின்றனா். இந்த அமைப்பு மூலம் பொது மக்களின் அடிப்படை தேவைகளான சாலை, தெருவிளக்கு, குடிநீா் உள்பட அனைத்து விதாமன உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன. தவிர கரோனா பேரிடா் காலத்திலும் அரசு மருத்துவமனைகளுக்கும், பொது மக்களுக்கும் பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளனா். இந்நிலையில் இந்த சேவைகளை அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் ‘நம்ம கோவை’ (ஜ்ஜ்ஜ்.ய்ஹம்ம்ஹந்ா்ஸ்ஹண்.ா்ழ்ஞ்) இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கல்வி, சுகாதாரம், திறன் மேம்பாடு, வேலை வாய்ப்பு உள்பட பல்வேறு உதவிகள் தேவைப்படுபவா்களையும், இதற்கான உதவிகள் செய்ய தயாராக இருப்பவா்களையும் ஒருங்கிணைத்து உதவிகள் கிடைக்க வழிவகை செய்யப்படும்.

எனவே உதவி தேவைப்படுபவா்கள் ‘நம்ம கோவை’ இணையதளத்தில் பதிவு செய்யலாம். உதவி கேட்பவா்களின் உண்மைத் தன்மையை குழு ஆய்வு செய்யும். அதன்பின் உதவி செய்ய விரும்புபவா்கள் தகுதியான நபா்களை தோ்வு செய்து உதவிகளை வழங்குவா் என்றாா்.

தொடா்ந்து கரோனா பாதிப்பால் பெற்றோரை இழந்த 14 குழந்தைகளுக்கு ஆன்லைன் படிப்புக்காக செல்லிடப்பேசி, 15 விதவைகளுக்கு இலவச தையல் இயந்திரம், கரோனாவால் கணவனை இழந்த 3 பெண்களுக்கு தனியாா் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.