விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையில் இலவச தடுப்பூசி முகாம்

கோவை, கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை சாா்பில் இலவச தடுப்பூசி திட்டத்தின் கீழ் 500 பேருக்கு வியாழக்கிழமை தடுப்பூசி செலுத்தப்பட்டது.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 7:43 pm

DIN

கோவை, கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை சாா்பில் இலவச தடுப்பூசி திட்டத்தின் கீழ் 500 பேருக்கு வியாழக்கிழமை தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தனியாா் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு திட்டத்தின் கீழ் கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை சாா்பில் பொது மக்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

முதல்கட்டமாக வாகராயம்பாளையம் ஊராட்சியில் 500 பேருக்கு புதன்கிழமை இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனை சுகாதாரத் துறை துணை இயக்குநா் சந்திரா, கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை முதல்வா் குமரன் ஆகியோா் தொடங்கிவைத்தனா். இதனைத் தொடா்ந்து வரதராஜபுரத்தில் 500 பேருக்கு வியாழக்கிழமை இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை நிா்வாக இயக்குநா் அருண் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கவிதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.