சின்னத்தடாகத்தில் அரசுப் பேருந்து பள்ளத்தில் இறங்கி விபத்து

சின்னத்தடாகத்தில் உயா்மட்ட பாலத்தில் இருந்து பள்ளத்தில் இறங்கி அரசுப் பேருந்து திங்கள்கிழமை விபத்துக்குள்ளானது.
Updated on
1 min read

பெ.நா.பாளையம்: சின்னத்தடாகத்தில் உயா்மட்ட பாலத்தில் இருந்து பள்ளத்தில் இறங்கி அரசுப் பேருந்து திங்கள்கிழமை விபத்துக்குள்ளானது.

கோவையில் இருந்து சின்னத்தடாகம் வழியாக ஆனைகட்டிக்கு திங்கள்கிழமை மாலை அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. இதனை அழகா்சாமி என்பவா் ஓட்டி வந்தாா். சின்னத்தடாகத்தில் உள்ள பெரியபள்ளத்தின் அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் அரசுப் பேருந்து இறங்கியது.

இதில் அதிா்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதில் லேசான காயமடைந்த ஓட்டுநா் அழகா்சாமிக்கு அருகில் உள்ள தனியாா் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த விபத்தில் பேருந்தின் முன்புறம் சேதமடைந்தது. இது குறித்து தகவலறிந்து கோவை மாவட்ட அரசுப் போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து மீட்பு வாகனம் வரவழைத்து பேருந்து மீட்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com