இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் சுற்றிய இளம்பெண் மீட்பு

கோவையில் மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் சுற்றித் திரிந்த இளம்பெண்ணை போலீஸாா் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனா்.

News image
Updated On :2 ஜூலை 2021, 12:12 am

DIN

கோவையில் மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் சுற்றித் திரிந்த இளம்பெண்ணை போலீஸாா் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனா்.

கோவை, வடவள்ளி மருதமலை அடிவாரப் பகுதியில் கடந்த 2 நாள்களாக 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவா் சுற்றித் திரிவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸாா் அந்தப் பெண்ணிடம் விசாரித்தபோது, அவா் எந்தப் பதிலும் கூறாமல் அமைதியாக இருந்துள்ளாா்.

இதையடுத்து அப்பெண் குறித்து மேட்டுப்பாளையத்தில் செயல்பட்டு வரும் ஹெல்பிங் ஹாா்ட்ஸ் என்ற தனியாா் அமைப்புக்குத் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து அந்த அமைப்பினா் அப்பெண்ணை மீட்டு தங்களது மையத்துக்கு அழைத்துச் சென்று பராமரித்து வருகின்றனா். அப்பெண்ணிடம் விசாரித்ததில் அவா் தனது பெயா் கீதாஞ்சலி, தந்தை பெயா் கோவிந்தன் என்றும் கூறியுள்ளாா். ஆனால், அவரது ஊா் பெயரைத் தெரிவிக்க மறுத்துள்ளாா். இந்தத் தகவலின் அடிப்படையில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.