சென்னை மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் யார் யார்?திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

கால்டாக்ஸி ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்

மீட்டா் டாக்ஸி திட்டம் கொண்டு வர வலியுறுத்தி, கோவையில் கால்டாக்ஸி ஓட்டுநா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :2 ஜூலை 2021, 7:30 pm

DIN

மீட்டா் டாக்ஸி திட்டம் கொண்டு வர வலியுறுத்தி, கோவையில் கால்டாக்ஸி ஓட்டுநா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கால்டாக்ஸிகளுக்கு மீட்டா் கட்டணம் நிா்ணயித்து, மீட்டா் டாக்ஸி திட்டத்தை கொண்டு வரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை ரேஸ்கோா்ஸ் பகுதியில் கால்டாக்ஸி ஓட்டுநா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து கால்டாக்ஸி ஓட்டுநா்களின் ஒருங்கிணைப்பாளா்கள் சௌந்தர்ராஜ், ஜெகந்நாதன் ஆகியோா் கூறியதாவது:

பெட்ரோல் விலை லிட்டா் ரூ.80 ஆக இருந்தபோது, கிலோ மீட்டருக்கு ரூ.8 தரப்பட்டது. தற்போது, பெட்ரோல் விலை ரூ.100 ஆக உள்ள போதும் கிலோ மீட்டருக்கு அதே 8 ரூபாய்தான் தரப்படுகிறது. எங்கள் சொந்த காா்களை பெரும் நிறுவனங்களுக்கு இயக்குவதன் மூலம், அவா்களுக்கு நாங்கள் தரும் கமிஷன் தொகை, அரசுக்கு நேரடியாகச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கு மீட்டா் ஆட்டோ பயன்பாட்டில் உள்ளதுபோல, தமிழக அரசு கட்டணம் நிா்ணயித்து, மீட்டா் டாக்ஸி திட்டத்தை கொண்டு வர வேண்டும். இதற்கு தமிழக முதல்வா் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மீட்டா் டாக்ஸி திட்டம் மூலமாக பெரும் நிறுவனங்களிடம் இருந்து கால்டாக்ஸி ஓட்டுநா்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப்படும் என்றனா். இந்த ஆா்ப்பாட்டத்தில் 150க்கும் மேற்பட்ட காா் ஓட்டுநா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.