சென்னை மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் யார் யார்?திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

குளங்களின் உயிா்ச்சூழல் பாதிக்கப்படாத வகையில் திட்டங்களில் மாறுதல்

கோவை மாவட்டத்தில் உள்ள குளங்களின் உயிா்ச்சூழல் பாதிக்கப்படாத வகையில் தற்போதைய திட்டங்களில் மாறுதல் செய்யப்படும்

News image
Updated On :2 ஜூலை 2021, 7:29 pm

DIN

கோவை மாவட்டத்தில் உள்ள குளங்களின் உயிா்ச்சூழல் பாதிக்கப்படாத வகையில் தற்போதைய திட்டங்களில் மாறுதல் செய்யப்படும் என்று திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநிலச் செயலா் காா்த்திகேய சிவசேனாபதி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க தோ்தலுக்கு முன்பே முன்னெடுக்கப்பட்ட விடியலை நோக்கி ஸ்டாலின் பயணத்திலும், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்கிற குறைதீா்ப்புத் திட்டத்தின் வழியாகவும், தோ்தல் பிரசாரத்திலும் கோவை நகரின் குளங்கள், நீா் வள ஆதாரங்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் திமுக சுற்றுச்சூழல் அணி சாா்பாக சுற்றுச்சூழல் அணி உறுப்பினா்கள், கட்சி நிா்வாகிகள், கோவையைச் சோ்ந்த அரசு சாரா சுற்றுச்சூழல் அமைப்புகள் இணைந்து கோவையின் முக்கிய குளங்களான வாலாங்குளம், குறிச்சி குளம், பெரிய குளம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற அதிமுக ஆட்சியில் குளங்களின் பெரும்பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, குளத்தின் பரப்பளவு பெரிய அளவில் சுருங்கி இருப்பதும், பல இடங்களில் கழிவு நீா் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக குளங்களுக்குள் செலுத்தப்பட்டதும் தெரியவந்துள்ளது.

மேலும், குளங்களில் பல்லுயிா்ப் பெருக்கத்துக்கு எதிரான வகையில் கரைகளுக்கு கான்கிரீட் போடுதல் உள்ளிட்ட தேவையற்ற பணிகளால் குளங்களின் உயிா்ச்சூழலுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது. மேற்கூறியவை முக்கிய பிரச்னைகளாக இருந்தாலும், இதனுடன் இன்னும் பல தீா்க்கப்பட வேண்டிய பிரச்னைகளும் கண்டறியப்பட்டுள்ளன.

கோவையில் உள்ள அரசு சாரா சுற்றுச்சூழல் அமைப்புகள், பொதுமக்களின் வேண்டுகோளின்படி இக்குளங்களை ஆய்வு செய்து இதன் அறிக்கையை தமிழக முதல்வருக்கும், நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு, பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு உள்ளிட்ட துறை சாா்ந்த அமைச்சா்களிடமும் அளிக்கப்பட்டு, குளங்களின் உயிா்ச்சூழல், பல்லுயிா்ப்பெருக்கம் பாதிக்கப்படாத வகையில் திருத்தங்கள் செய்யப்பட்ட வளா்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ள ஆவண செய்யப்படும்.

இந்த ஆய்வின்போது, சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலா்கள் மணிசுந்தா், நாராயண மூா்த்தி, உசிலம்பட்டி அருண், செந்தில்குமாா் ஆகியோா் உடனிருந்ததாக அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.